සිංහල  |  தமிழ்  |  English  |  日本人
அரஹத் மஹாநுவர வஜிர புத்தி தேரரின் போதனைகளுக்கென அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வலைத்தளமாகும்

தானம் : வழங்குதல் - கைவிடுதல் - பற்றறுத்தல்


(இந்தக் கட்டுரையானது அரஹத் மஹநுவர வஜிரபுத்தி தேரரின் பிரசங்கங்களைத் தழுவியதாகும்.)

தானம் ; வழங்குதல் - கைவிடுதல் - பற்றறுத்தல் என்பது புத்தரின் போதனைகளைப் பின்பற்றுபவர்களுக்கு மாத்திரம் , பிரத்தியேகமானது அல்ல. தானம் என்பது கிறிஸ்தவர்கள் ,இந்துக்கள், இஸ்லாமியர்கள் மற்றும் ஏனைய மதத்தவரும் பொதுவாகக் கடைபிடிக்கும் ஒரு நடைமுறை ஆகும். இந்த உலகம் Nicca(நிக்க), Sukha (சுக்ஹ) Athma(ஆத்மா) (நிலையானது மகிழ்வளிக்கக்கூடியது மற்றும் சுயமதிப்புடையது) என்னும் மூன்றினாலும் ஆனது என்று அவர்கள் நம்புகின்றார்கள். ஆகவே அவர்கள் பரலோக இன்பம் மற்றும் இதர லௌகீக சுகபோகங்களை பெற்றுக்கொள்ள விரும்பி தானமளிக்கின்றனர்.

தானமளிப்பது அனைவரிடத்திலும் பொதுவாகக் காணக்கூடிய ஒரு நடைமுறை என்றாலும் புத்தரின் தூய போதனைகளின் பிரகாரம் தானம் வழங்குவது என்பது தனித்துவமும் பிரத்தியேகமும் வாய்ந்ததொன்றாகும். ஏன் அது தனித்துவமானது ? எவ்வாறு அது வேறுபடுகின்றது?

ஏனெனில் இந்த உலகம் Annicca (அணிக்க) Dukkha (துக்க) மற்றும் Anattā (அனத்த) (நிலையில்லாதது, நிலையான இன்பம் ஏதுமற்றது, மற்றும் சுய இயல்பற்றது ) என்பவற்றால் ஆனது என புத்தரே வெளிப்படுத்தினார். ஆகையால் புத்தரைப் பின்பற்றுபவர்கள் வாழ்வின் நிலையில்லாத்தன்மையினை அறிந்து நிலையற்ற இவ்வுலகத்திலிருந்து விடுபடுவதற்காக தானமளிக்கின்றார்கள். இந்தவகையிலேயே தானமளித்தல் வேறுபடுகின்றது.

எம்மால் எதனை வழங்க முடியும்?

ஆடைகள் தேவைப்படும் நபர்களுக்கு எங்களால் உடுக்க ஆடைகளை வழங்க முடியும் , தாகத்தினாலும் பசியினாலும் வாடியிருப்பவர்களுக்கு உணவு மற்றும் நீரினை வழங்கி அவர்களின் பசி மற்றும் தாகத்தினை நீக்க முடியும். உறையுள் அற்றவர்களுக்குத் தங்குவதற்கு ஒரு இருப்பிடத்தினை வழங்க முடியும், நோயாளர்களுக்கு எம்மால் மருந்தினையும் வழங்க முடியும். Cheevara (உடை) , Pindapātha (உணவு) ,Senāsana (உறையுள்) மற்றும் Gilānaprathya (மருந்து) என்ற 4 அடிப்படைத் தேவைகளையும் சாதாரண மக்களுக்கும் ஆர்ய சங்கவிற்கும் எம்மால் பூர்த்தி செய்ய முடியும்.

சங்கடத்திலிருப்பவர்கள், பயம்கொண்டவர்கள் மற்றும் வருந்துபவர்களைத் தேற்றுதல். இது எளிமையான இனிய சொற்களினால் செய்யப்படக் கூடியதொன்றாகும் , உதாரணமாக "தயவு செய்து கலங்காதீர்கள்" "அனைத்தும் சரியாகிவிடும்" "நாங்கள் உங்களுக்கு உதவுவதற்காக இங்கிருக்கின்றோம்" "நீங்கள் இப்பயணத்தில் தனியாக இல்லை" போன்ற இனிமையான சொற்களை அதிகம் தேவையான நேரங்களில் உதிர்ப்பதனூடாக பாதுகாப்புணர்வினைத் தோற்றுவித்து , அக்கறை மற்றும் கரிசனையினை எம்மால் வழங்க முடியும்.

ஒரு பாடத்தினைக் கற்பித்தல் அல்லது ஒரு பிள்ளையின் கல்விக்கு உதவுதல் , வாழ்க்கைத் தேர்ச்சி ஒன்றினைக் கற்பித்தல், அல்லது அறிவுரை மற்றும் வழிகாட்டுதலை நாடி வருபவர்களுக்கு நாம் அதனை வழங்கக்கூடிய நிலையில் இருக்கும் பட்சத்தில் அதனை வழங்குதல். ஒழுக்கமற்ற வாழ்க்கையொன்றினை நடத்திச் செல்பவர்களுக்கு ஒழுக்கத்தினைப் பற்றியும் சுய நடத்தை தொடர்பான தெளிவினையும் ஏற்படுத்தல், மேலும் தம்மத்தினைப் பற்றி அறியாத ஒருவருக்கு அதனைப் பற்றிய தெளிவினை ஏற்படுத்தி Smmāditthi (சுமடித்தி) பற்றிய பார்வை ஒன்றினைப் பெற்று Ekāggata (ஏககாட்ட) மற்றும் sathipatthāna (சாதிபத்தன) வினை விருத்திசெய்து சம்சார வாழ்விலிருந்து விடுபட அவருக்கு உதவுதல்.

இவ்வனைத்து தானங்களும் பிரதிபலன் பாராமலே வழங்கப்படுகின்றன. ஏன்? ஏனெனில் ஏதேனும் ஒன்றை எதிர்பார்த்து அல்லது விரும்பி வழங்கப்படும் தானங்கள் உண்மையில் வணிகப் பரிவர்த்தனைகள் அல்லது முதலீடுகளாகவே கருதப்படும். புத்தரின் தூய தம்மத்தினை பின்பற்றுபவர்களால் வழங்கப்படும் தானம் இதுவன்று.

புத்தர் காட்டிய வழி நடப்பவர்கள் வழங்கும் தனமானது Nekkamma Sankappa ( நெக்கம்ம சங்கப்ப) Avyapada Sankappa(அவ்யபத சங்கப்ப) Avihimsa Sankappa ( அவிஹிம்சா சங்கப்ப) என்பவற்றைத் தொடர்ந்து வருவதாகும். (அதாவது நல்லெண்ணங்களின் வெளிப்பாடாகவும் , ஊரு விளைவிக்காத தன்மையினையும் தொடர்ந்து பேராசையினின்று மனதினை விடுவித்தல் ). "தானத்தினைப் பெற்றுக்கொள்பவருக்கு இந்த தானம் பயனுள்ள ஒன்றாக அமையட்டும், அவர் இந்த தானத்தினால் மகிழ்ச்சியடையட்டும் " அன்பு மற்றும் இரக்கம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு லௌகீக சுகபோகங்களிலிருந்து மனதினை விடுவிப்பதற்காகவே, புத்தர் காட்டிய தூய நெறிப்படி நடப்பவர்களால் தானமளிக்கப்படுகின்றது.

மேன்மையான அட்டாங்க மார்க்கத்தில் முன்னேறுவதற்கான எண்ணத்தோடு வழங்கப்படும் தானங்கள், சரியானப் பாதையைப் பின்பற்றி நடக்கும் எண்ணத்தோடு வழங்கப்படும் தானங்கள் , மற்றும்

kilēsa (மனக்கிலேசங்கள்)இலிருந்து விடுபடும் எண்ணத்தோடு வழங்கப்படும் தானங்கள் என்பவை பெரும் ஆசீர்வாதங்களைப் பெறும். மேலும் இத்தகைய தானங்கள் விளைவிக்கும் நன்மைகளைப் பற்றி புத்தர் மிக அழகாகவும் தெளிவாகவும் விளக்கியுள்ளார்.